வியாழன், 20 டிசம்பர், 2012

மீண்டும் சாதி வெறியாட்டம் - தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கிறது...!

        தருமபுரியை தொடந்து இப்போது கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலித்ததற்காக அதேக் கல்லூரியில் படிக்கும் தலித் இனத்தைச் சேர்ந்த இளைஞனை  அதே சாதிவெறிக்கூட்டம் கொன்றிருக்கிறது.  
              நம் சாதிப் பெண்களை காதலித்தால் அவன் தலித்தாக இருந்தால் அவனை கழுத்தை அறுத்து கொள்ளுங்கள் என்று சாதிவெறிக் கூட்டத்தின் தலைவர்கள் பேசியது  அடிப்படையில் தான் இது போன்ற கொலைகளும், வீடுகள் எரிப்புகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் சாதிவெறியாட்டம் போடும் அப்படிப்பட்ட தலைவர்களை கைது செய்யாமல்  தமிழக அரசும், காவல்துறையும் வாய் மூடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அதனால் ஏற்பட்ட துணிச்சல் தான் தருமபுரி சம்பவத்திற்குப் பிறகு இன்று சிதம்பரத்தில் தன்கள் வெறியாட்டத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை: