சனி, 22 டிசம்பர், 2012

மக்கள் என்றால் கடிதம் - மோடி என்றால் பயணமா...?

       
       முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை மாநில நலனுக்காக அல்லது மக்களின் நலனுக்காக பேசுவதற்கோ அல்லது விவாதிப்பதற்கோ பிரதமரையோ அல்லது மத்திய அமைச்சர்களையோ எத்தனை முறை சந்தித்திருப்பார் என்று கேட்டால் ஒன்று... இரண்டு என்று விரல் விட்டு எண்ணிவிடலாம்.
           மின்சாரப் பிரச்சனையாக இருந்தாலும் சரி... காவிரி நதிநீர் பிரச்சனையாக இருந்தாலும் சரி... இலங்கைத் தமிழர், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின்  துப்பாக்கி சூடு, தமிழக மீனவர்கள் இலங்கை படையால் கைது, முல்லை பெரியாறு இப்படி எந்தப் பிரச்சனைகளாக இருந்தாலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அனைத்துக் கட்சித் தலைவர்களையோ அல்லது அமைச்சர்களின் குழுக்களையோ அழைத்துக்கொண்டு தலைநகரில் பிரதமரையோ அல்லது மத்திய அமைச்சர்களையோ சந்தித்துப் பேசாமல், கோட்டையில் உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு கடிதத்தை எழுதியனுப்பிவிடுவார். இது இவரது பழக்கமாக இருந்துவருகிறது.
             ஆனால் அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று வருகிற டிசம்பர் 26 - ஆம் தேதியன்று நான்காவது முறையாக முதலமைச்சர் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இதே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்திற்கு நேரில் செல்வது என்பது நியாயம் தானா...? தன்னுடைய பதவியேற்பு விழாவில் மோடி கலந்துகொண்டதற்காக இது ஜெயலலிதா காட்டும் நன்றிக் கடனா...? அல்லது 2014 பாராளுமன்றத் தேர்தலுக்கான வியூகமா...? என்னமோ மக்களுக்கு புரிந்தால் சரி...!

கருத்துகள் இல்லை: