வெள்ளி, 14 டிசம்பர், 2012

அழகிரி அண்ணே...யோக்கியன் வர்றான் சொம்ப எடுத்து உள்ளே வை...!             பல கோடி ரூபாய் கிரானைட் கல் ஊழல் செய்து குற்றம் சாட்டப்பட்ட திமுகவின் தலைவர் கருணாநிதியின் பேரனும், மத்திய அமைச்சர் மு. க. அழகிரியின் தவப்புதல்வனுமான துரை தயாநிதி பலமாதங்களாக தலைமறைவாகி சித்து விளையாட்டு விளையாடினார். தமிழக போலிஸ் துறையும் வலைவீசித் தேடியது. அவர்களுக்கும் துரை தயாநிதி ஓடி ஒளிந்த இடம் தெரியவில்லை. இதற்கிடையில் சட்டத்தின் ஓட்டையை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார்கள். பையனுக்கு ஜாமீன் கிடைத்ததில் அப்பாருக்கு ரொம்பத்தான் சந்தோசம்.
     அப்பாவே இன்று குற்றம் சாட்டப்பட்ட தன்  தவப்புதல்வனை, முதல் முதல் எல்.கே.ஜி சேர்க்க வருகிற அப்பா போல் சந்தோஷமாகவும் பெருமையாகவும் பெருமிதத்துடனும் சிரித்துக்கொண்டே நீதிமன்றத்திற்கு அழைத்து வந்ததைப் பார்த்தால், ''2012 - ஆம் ஆண்டின் மிகச் சிறந்த அப்பா'' என்ற பரிசு கொடுக்கலாம்.
             அதுமட்டுமா, தன்  தவப்புதல்வனுக்கு ''நற்சான்றிதழ்'' வழங்கியிருக்கிறார். அப்படி என்ன சொல்லியிருக்கிறார் என்றால், ''துரை தயாநிதி மீது  தவறு இருப்பதாக எனக்குத் தெரிந்தால், அவரை உடனே நீதிமன்றத்தில் சரண் அடையும்படி நானே சொல்லியிருப்பேன்'' இது தானுங்க மு.க.அழகிரி உதிர்த்த பொன்மொழிகள்.

கருத்துகள் இல்லை: