செவ்வாய், 4 டிசம்பர், 2012

வாழ்வாதாரம் காக்க பாராளுமன்றம் நோக்கி எல். ஐ. சி. முகவர்கள் பேரணி....!

            கடந்த நவம்பர் 22 - ஆம் தேதியன்று புதுடெல்லியில் எல் ஐ சி - யில் பணிபுரியும் முகவர்களின் ''பாராளுமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் தர்ணா'' நடைபெற்றது. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதமாக உயர்த்த வகை செய்யும் ''இன்சூரன்ஸ் திருத்த மசோதா - 2008'' - ஐ திரும்பப்பெற கோரியும்,  தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு எல். ஐ. சி. -யையும் முகவர்களையும் பாதிக்கும் மத்திய அரசின் பல்வேறு  திட்டங்களை - எல். ஐ. சி -க்கும் முகவர்களுக்கும் எதிரான மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை  நிறுத்தி வைக்கும் படியும் அகில இந்திய எல். ஐ. சி முகவர்கள் சங்கம் - லிகாய் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வீரம் செறிந்த போராட்டத்தில் நாடு முழுதுமிருந்து ஆயிரக்கணக்கான முகவர்கள் கலந்துகொண்டனர்.
           இந்த தர்ணா போராட்டத்தை லிகாய் சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர். பாசுதேவ் ஆச்சாரியா அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். அதேப்போல் சங்கத்தின் செயல் தலைவர் எஸ். எஸ். பொத்தி, பொதுச்செயலாளர் பி.ஜி. திலீப், தென்மண்டல தலைவர் பெல்லார்மின், செயலாளர் செல்வராஜ், தமிழ்மாநில செயலாளர்  எஸ். சுத்தானந்தம் மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள் பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
             மேலும், சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் தோழர். பாசுதேவ் ஆச்சாரியா தலைமையில் நாடாளுமன்ற மக்களைத்தலைவர் திருமதி. மீரா குமார் அவர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுதும் உள்ள இலட்சத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றை அளித்தனர்.
         தமிழ்நாட்டைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தோழர்கள் டி .கே. ரங்கராஜன், பி. ஆர். நடராஜன் உட்பட பல மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்திருந்து வாழ்த்தினர். 

 
 

கருத்துகள் இல்லை: