ஞாயிறு, 16 டிசம்பர், 2012

மறுபடியும் நான் பிறப்பேன்...!

மறுபடியும் நான் பிறப்பேன்....!மக்களுக்கு
ஆசை காட்டி
காசை வாங்கி
நாட்டை விற்ற பாவிகளே...
இன்று மட்டும்
நான் இருந்திருந்தால்
என் கைத்தடியால்
உங்கள் மண்டையை
பிளந்திருப்பேன்.
அடிமைப் பதருகளே...
நீங்கள்
அந்நியனிடம் கைநீட்டவா
இன்பச்சுதந்திரம்
பெற்றுத்தந்தேன்.
உங்களுக்கு மட்டும் தானடா
இது
ஆனந்த சுதந்திரம்.
மக்களெல்லாம்
ஏனிந்த சுதந்திரம்
என்றல்லவா கேட்கிறார்கள்...?
பொழுதெல்லாம் தேசத்தை
கூவி விற்கும் மூடர்களே...
நான் மறைந்து விட்டேன்
என்று நினைத்தீரோ...?
எதிரே வரமாட்டேன்
எனத் துணிந்தீரோ...?
நான் மறுபடியும்
பிறப்பேன்
மீண்டும் எரிமலையாய்
வெடிப்பேன்.
அந்நியனுக்கு எதிராக அல்ல
கொள்ளையர்களே
உங்களுக்கு எதிராக.
கொள்ளைகொண்டு போகும்
என் தேசத்தை காப்பாற்ற
நான் மறுபடியும்
பிறப்பேன்..!

*இது பாரதியின் பிறந்தநாளன்று நான் எழுதிய கவிதை

1 கருத்து:

கவியாழி கண்ணதாசன் சொன்னது…

\\நான் மறுபடியும்
பிறப்பேன்..!//

ஆம் மீண்டும் பிறக்கவேண்டும்