சனி, 23 ஆகஸ்ட், 2014

மக்கள் சிந்தனைகொண்ட எழுத்தாளனுக்கு என்றும் மரணமில்லை....!

                       கடந்த மக்களவைத்தேர்தலின் போது  ''பாரதீய ஜனதாக் கட்சி வெற்றியடைந்து  விடக்கூடாது'' என்பதையும், ''நரேந்திரமோடி இந்த நாட்டின் பிரதமராக தப்பித்தவறி கூட வந்துவிடக்கூடாது'' என்பதையும், நாட்டின் மீதும், மக்களின் மீதும் அக்கறை கொண்ட நல்லோர்கள் குறிப்பாக எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களும், அறிஞர்களும் மக்களிடையே பிரச்சாரமே நடத்தினார்கள். அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டோரில் கன்னட முற்போக்கு எழுத்தாளர் பேராசிரியர் யு. ஆர். ஆனந்தமூர்த்தியும் ஒருவர். அவர் நிஜவாழ்க்கையில் எப்படி வாழ்ந்துகாட்டினாரோ அதைத்தான் தன் எழுத்துகளாக படைத்தார். தன்  படைப்புகளில் என்ன எழுதினாரோ அப்படித்தான் வாழ்ந்தும் காட்டினார். 
            அப்படித்தான் சென்ற பாராளுமன்றத்தேர்தலின் போது பேராசிரியர் ஆனந்தமூர்த்தி, ''நரேந்திரமோடி வெற்றிபெற்று பிரதமரானால் நான் இந்தியாவை விட்டே வெளியேறுவேன்'' என்று மதவெறிக்கூட்டம் இந்த தேசத்தை ஆட்சி செய்ய அனுமதிக்கக்கூடாது என்று மக்களை எச்சரிக்கை செய்தார். அனால் 32 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று எண்ணிக்கை அடிப்படையில் நரேந்திரமோடியே ஆட்சிக்கு வந்தார். ஆம்... பேராசிரியர் ஆனந்தமூர்த்தி தான் சொன்னதுபோலவே இந்தியாவை மட்டுமல்ல உலகத்தை விட்டே வெளியேறிவிட்டார். 82 வயதான ஆனந்தமூர்த்தி நேற்று காலமானார். அவர் மறைவிற்கு எழுத்தாளர் உலகமே  கண்ணீர் சிந்துகிறது. முற்போக்கு சிந்தனைகளை சிதறும் பேனா மை கூட அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றது. ஆனால் மூடநம்பிக்கையை, மதவெறியை எதிர்த்தார் என்பதற்காக பேராசிரியர் ஆனந்தமூர்த்தியின் மறைவை மதவெறிக்கூட்டத்தை சேர்ந்த பிணந்திண்ணிகள் காட்டுமிராண்டித்தனமாக இனிப்புகள்  வழங்கியும், பட்டாசுகள்  வெடித்தும் கொண்டாடினர் என்பதை பார்க்கும் போது அவரது மதவாத எதிர்ப்பின் சக்தியை  நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.
            அப்படிப்பட்ட அந்த மக்கள் சிந்தனைகொண்ட எழுத்தாளனுக்கு என்றும் மரணமில்லை.  எழுத்துலகம் இருக்கும் வரை வாழ்ந்துகொண்டே இருப்பான். என்றும் சாகா வரம் பெற்ற அவரது எழுத்துகளில் அவர் வாழ்ந்துகொண்டிருப்பார். 
மறைந்த பேராசிரியர். யு. ஆர். ஆனந்தமூர்த்திக்கு எங்கள் அஞ்சலி...!

1 கருத்து:

vijayan சொன்னது…

caலோஹியாவை தலைவராக கொண்ட காந்தியன் சோசலிஸ்டுகள் கர்நாடகத்தில் எல்லா சாதியுளும் நீக்கமற நிறைந்துள்ளனர்.அதில் பிராமணர்களும் உண்டு,கௌடர்களும் உண்டு,அரிசனர்களும் உண்டு.அனந்தமூர்த்தியும் அதில் ஒருவரே.தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தினர் பிராமண ஜாதியில் ஒருவர் பிறந்தார் என்பதற்காக அவரை கேவலபடுத்தும் பகுத்தறிவு இன்னும் கர்நாடகத்திற்கு வரவில்லை.வாழ்க அனந்தமூர்த்தி புகழ்.