சனி, 2 ஆகஸ்ட், 2014

''கேடி சாமியார்'' நித்யானந்தாவை விரட்டியடியுங்கள்...!


               அண்மையில்  ''கேடி சாமியார்'' நித்தியானந்தா கர்நாடக மாநிலத்திலுள்ள பிடாதியில் உள்ள தன்னுடைய ஆசிரமத்தில் பக்தகோடிகளின் மத்தியில் ''அருளுரை'' வழங்கும் போது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை பற்றி கிண்டல் செய்து பேசியிருக்கிறான். ஏற்கனவே கன்னட அமைப்புகளை பற்றி இழிவாக பேசியதால், கன்னட அமைப்புகளால் ஓட ஓட விரட்டப்பட்டு தற்போது தலைமறைவாய் இருக்கிறான். நீதிமன்றம் வேறு பிடிவாரன்ட் பிறப்பித்திருக்கிறது.
             இவன் மீது ஏற்கனவே பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக பல மோசடிப்புகார்களும்,  பாலியல் புகார்களும் வழக்குகளும் இருக்கின்றன. ஏற்கனவே ஒரு பாலியல் குற்றம் காரணமாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவன். என்றாலும் கர்நாடக மாநிலத்திலும் இதுபோன்ற மோசமான இழிசெயல்களில் ஈடுபடுவதாக ஒரு அமெரிக்க பெண்மணி உட்பட பாதிப்படைந்த பெண்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இது சம்பந்தமான புகார்களும் நீதிமன்றத்தில் இருக்கின்றன.
                இவ்வளவு ''பேரும் புகழும்'' உள்ள ''கேடி சாமியார்''  நித்தியானந்தா தான் கம்யூனிஸ்டுகளை வாய்க்கொழுப்போடு பேசியிருக்கிறான். கம்யூனிஸ்டுகள் தொழில்ரீதியா போராடுவாங்களாம். 30-40 பேர் கொடி பிடிச்சிகிட்டு போராடுவாங்க. அப்புறம் கலைந்து போய்விடுவாங்க. ஒரு பிரச்சனை முடியறதுக்குள்ள இன்னொரு பிரச்சனைக்குப் போராட ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம் காணாமப் போயிடுவாங்க. பணப்பட்டுவாடா முடிஞ்சதும் கம்யூனிஸ்ட்டுகள் போராட்டத்தை முடிச்சுக்கிட்டு கலைஞ்சு போயிடுவாங்க. என்றெல்லாம் வாய்க்கு வந்தபடியெல்லாம் கூசாம பேசியிருக்கிறான்.
              ஆன்மீக கூட்டம் நடத்தி ''அருளுரை'' வழங்கறது மூலமா கோடிக்கணக்குல வசூல் செய்றதும், அதே பக்தக் கோடிகளின் சொத்துக்களை வாங்கிப்போடுவதும், ஆன்மீக கூட்டத்திற்கு வருகிறப் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதுமான மோசடிகளை தொழில்ரீதியாக செய்கின்ற ''கேடி சாமியார்'' நித்தியானந்தாவை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழகம் - புதுச்சேரி மாநிலத்தினுள்ளே நுழையவிடாமல் ஓட ஓட விரட்டியடிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: