செவ்வாய், 21 ஏப்ரல், 2015

தானே சொரிந்துகொள்ளும் ''கவிப்பேயரசு'' வைரமுத்து...!



                  ''கவியரசு'' கண்ணதாசன் மறைவிற்கு பிறகு தனக்குத்தானே ''கவிப்பே(ய)ரரசு'' என்று முடிசூடிக்கொண்ட திரைப்படப் பாடலாசிரியர்  வைரமுத்து எப்போதுமே அற்பப்பலனுக்காக அலைந்துகொண்டு, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களையும், புகழின் உச்சியில் உள்ளவர்களையும் கூச்சப்படாமல் சுகமாக சொரிந்து விடுவதில் வல்லவர். அப்படி அடுத்தவர்களை சொரிந்து விடும்போது, தனக்கு தானே அதைவிட சுகமாக இரத்தம் வரும் வரை சொரிந்து கொள்வார். சுயவிளம்பர போதை தலைக்கேறி திரிபவர். அந்த சமயத்தில் தன்னுடைய வளர்ச்சிப் பாதையில் யாரும் குறுக்கிடாமல் பார்த்துக்கொள்வார். தனக்கு நிகராகவோ, தன்னை விட அதிகமாகவோ யாரும் வளர்ந்துவிடாமல் அவர்கள் வளர்ச்சியை வெட்டிவிடுபவர் தான் இந்த வைரமுத்து. இவரது துறையிலேயே இவரைவிட வேகமாக வளர்ந்துவந்த இவரது மனைவி பொன்மணியையே மேலும் வெளியே தெரிந்துவிடாமல் இத்தனைக்காலமாக அமுக்கி வைத்து, தன் மகனை மட்டும் வளர்த்துவிடும் ஆணாதிக்க சிந்தனை மேலோங்கியவர். 
               விருதுகளுக்காகவும், பட்டங்களுக்காகவும் பல்வேறு வார்த்தைஜால வித்தைகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்பவர்.  மத்திய அரசின் இன்னும் பெரிய விருதுகளுக்காக காத்திருப்பவர். அதனால் தான் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்-யை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விருது கொடுத்து பாராட்டுவிழா நடத்தினார். 
            அப்படிப்பட்ட வைரமுத்து தான் அண்மையில் மறைந்த தமிழ் இலக்கிய ஜாம்பவான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் தன்னை பாராட்டி அளித்ததாக ஒரு பொய்யான வாழ்த்துக் கடிதத்தை குமுதம் வார இதழில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். ஜெயகாந்தன் எழுதியதாக சொல்லப்பட்ட அந்த கடிதம் ஜெயகாந்தனின் வழக்கமான  நடையிலோ மொழியிலோ இல்லை என்றும், மேலும் அவர் சில காலமாக எழுதுவதற்கும், கையெழுத்துப் போடுவதற்கு இயலாத உடல்நிலையிலும், சூழ்நிலையிலும் இருந்தார் என்றும், இந்த கடிதம் ஜெயகாந்தன் எழுதியிருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது மகள் திருமதி.தீபலட்சுமி மறுத்திருக்கிறார். 
                இறந்து போன ஒரு பெரிய மனிதரின் பெயரால் ஒரு மலிவான விளம்பரம் செய்து எதை அடையப்போகிறார் இந்த கவிப்பேயரசு...?

கருத்துகள் இல்லை: