ஞாயிறு, 13 ஜனவரி, 2013

உழவையும், தொழிலையும் உயர்த்திப் பிடிப்போம்...!

உழவையும், தொழிலையும்            
நாசப்படுத்த                 
நம் நாட்டிற்குள்ளே              
பன்னாட்டு நிறுவனங்கள்               
நிலம் வறண்டு போனதால்           
வருமானம் இல்லாமல்           
வாடிய விவசாயிகள்           
தன் மானம் காத்திடவே            
மாய்த்துக் கொண்டார்            
தன் உயிரை.             
நாட்டை கொள்ளை கொள்ள            
உள்ளே நுழைந்த              
அந்நியக் கூட்டத்தை              
விரட்டியடிப்போம்.          
 உழுபவர்களுக்கு நிலத்தையும்,            
உழைப்பவர்களுக்கு நாட்டையும்           
கொடுப்போம்.          
அரிவாளும் சுத்தியலும்             
தான்           
உழவுக்கும் தொழிலுக்கும்          
அடையாளம் காட்டும்.             
நாடு உயர, நாம் உயர          
அரிவாளையும் சுத்தியலையும்           
உயர்த்திப் பிடிப்போம்.           
உழவுக்கும் தொழிலுக்கும்              
வந்தனை செய்வோம்.                 
பொங்கல் திருநாளில்          
உறுதி ஏற்போம்...        
   
                                                  1 கருத்து:

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் சொன்னது…

வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!