புதன், 2 ஜனவரி, 2013

இது புத்தகக் கண்காட்சி அல்ல - புத்தகத் திருவிழா...!

            இது புதுச்சேரி புத்தகக் கண்காட்சி என்று கொள்வதை விட, புதுச்சேரி புத்தகத் திருவிழா என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அதற்கு அரசு அறிவித்த 25% சிறப்புக் கழிவும் ஒரு காரணம் என்றாலும், மக்களுக்கு புத்தகங்களை வாங்கும் ஆர்வம் கூடிவிட்டது என்பதும், மக்களிடையே வாசிப்புப் பழக்கம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதும்
           மற்ற காரணங்களாகும். அதனால் தான் கடந்த ஆண்டுகளில் வந்த கூட்டத்தை விட இந்த முறை மிக அதிகமான கூட்டம் என்பதும், புத்தகங்கள் வாங்குவதில் அதிக பணத்தை செலவு செய்கிறார்கள் என்பதும் அந்த திருவிழாவில் கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற புத்தக விற்பனையே சான்று ஆகும்

கருத்துகள் இல்லை: