வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

புதுவை காமராசருக்கு பொறந்தநாளு பாருங்கோ...!

இப்படி இருந்தவரைத் தான்....
இப்படி ஆக்கிப்புட்டாங்க....
            ஒவ்வொரு வருஷமும் ஆகஸ்ட் மாதம் நெருங்கும் போது புதுவையே  விழாக்கோலத்துல  தான் இருக்கும். எங்க புதுச்சேரியில புதுவை காமராசரு... புதுவை காமராசருன்னு ஒருத்தரு இருக்காருங்க. சின்னகாமராசருன்னுக் கூட தன்னைத் தானே கூப்பிட்டுக்கு திரிவாரு... ஆனா அவரு அப்படி கூப்பிட்டுகிறதுல  தப்பு இல்லைங்க.... ஏன்னா.... தமிழ்நாடு காமராசரு மாதியே டிரஸ் போட்டுக்குவாரு...  அவர மாதிரியே இவரும் கல்யாணமும் பண்ணிக்கலீங்க....  அந்த பெரிய காமராசரு இந்திரா காந்தியோடு சண்டைப்போட்டுகினு அன்றைய காங்கிரச விட்டு வெளியேறினாரு.... இந்த காமராசரு அவங்க மருமக சோனியா காந்தியோடு சண்டைப்போட்டுகினு இன்றைய காங்கிரஸ் கட்சிய விட்டுட்டு வெளியேறிட்டாரு.... இப்படியே தமிழ்நாட்டு காமராசருக்கும் புதுவை காமராசருக்கும் நெறைய ஒத்துமையா சொல்லலாமுங்க... அம்புட்டு இருக்குமுங்க...  
போதும்டா சாமீ....
          இந்த புதுவை காமராசருக்கு தான் ஆகஸ்ட் நாலாம் தேதி பொறந்தநாளாம்...  ஊரே நாரிப்போச்சீங்க... அப்பப்பா...ஊரு முழுதும் ஏகப்பட்ட டிஜிட்டல் பேனருங்க... புதுவை காமராசரின்  ஒரிஜினல்  கெட்டப்ப மாத்தி   விதவிதமான கெட்டப்புல  போட்டு அசத்தியிருப்பாங்க.... பாக்கிறவங்க கண்ணெல்லாம் கூசி ''மெட்ராஸ் ஐ''யே  வந்துடும்முன்னா பாத்துக்குங்க.... அதை பாத்தா aஅழுவுற கொழந்தைங்க கூட அழுகையை நிறுத்திடுமுங்க.... அந்த படங்களை எல்லாம் இந்த சின்னகாமராசரு நடுநிசிக்குப்  பிறகு ரசியோ ரசியின்னு  ரசிப்பாருங்கலாம் பேயி மாதிரி... 
இது ரொம்ப ஓவர்...!
           ஆனா அவர் மீதுள்ள கோபத்தை தான் மக்கள் இப்படி எல்லாம் போட்டு அவர அசிங்கப்படுத்தராங்க என்பதை பாவம் புதுவை காமராசரூ  புரிஞ்சிக்கவே இல்லைங்க. இருந்தாலும் நாங்கல்லாம் ரொம்ப பொறுமைசாலி தாங்க... இது மாதிரி எவ்வளவு டிஜிட்டல் பேனர் அடிச்சாலும் தாங்குரோமில்ல...? 
என்ன கொடுமைடா சாமீ.....
                                           

3 கருத்துகள்:

Dhivya Cadence சொன்னது…

ahahaaaaa... funniest thing i have ever seen...

Dhivya Cadence சொன்னது…

ahahaaahaaaa.... funniest thing i have ever seen...

kumaresan சொன்னது…

இம்சை அரசன் 23ம் புலிகேசி கெட்டப்பில் போட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமோ? யாராவது போய் கேட்டுப்பாருங்களேன், “என்னங்க இப்படியெல்லாம் விளம்பரங்கள் வைக்கணுமா” என்று. உடனே அப்படியே தன்னடக்க அவதாரமாகி, “எனக்கு இதெல்லாம் பிடிக்காதுங்க... தொண்டர்கள் ஆர்வ மிகுதியிலே செஞ்சுடறாங்க...” என்று கூசாமல் சொல்வார்கள்.

மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் போன்றவற்றிற்கான விளம்பரங்களின்போது தனிப்பட்ட தலைவர்களை முன்னிறுத்தாதீர்கள், குறிப்பிட்ட இயக்கத்தின் நோக்கத்தையும் கட்சியின் லட்சியங்களையும் முன்னிறுத்துங்கள் என்று சொல்கிற உறுதி மார்க்சிஸ்ட் கட்சியிடம் மட்டுமே இருக்கிறது.