புதன், 6 ஜூலை, 2011

எதிர்பார்த்தபடியே சமச்சீர் கல்விக்கு சமாதி கட்டியாச்சி..!

                     சமச்சீர் கல்வி பாடத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, 597 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நேற்று செவ்வாயன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, தமிழக அரசின் தலைமைச்செயலா ளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது. இக்குழுவில் கல்வியாளர்கள் என்ற பெயரில், சமச்சீர் கல்வியை எதிர்க்கும் தனியார் மெட்ரிக்பள்ளி நிர்வாகிகளும் இடம்பெற்றனர். 

                    உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேற் கண்ட குழுவின்அறிக்கை யில், நடப்புக்கல்வியாண் டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த முடியாத அளவுக்கு குறைகள் உள்ளன; தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கவுன்சில் (என்சிஇஆர்டி) 2005ம் ஆண்டு வடிவமைத்த 
தேசியப் பாடத்திட்ட தரத்திற்கு ஏற்றவாறு சமச்சீர் பாடத் திட்டம் இல்லை என்றும் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
              சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அவசர கோலத்தில் வகுக்கப்பட்டுள்ளன என்றும், மெட்ரிக்குலேசன் தரத்திற்கு சில பாடங்கள் அமைந்திருப்பதால் மாணவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
                 தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததில் தவறுகள் நிறைந்துள்ளன என்றும், மொழிப் பாடத்தில் இலக்கணப்பிழைகளும் கருத்துப்பிழைகளும் உள்ளன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
                 மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பல செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த சமச்சீர் பாடத்திட்டத்தைக்கொண்டு நடப்பு கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த இயலாது. இந்தப் பாடத்திட்டம் முழுமை யாக திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும் 
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
                   அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை விஷயங்களும் முன்னமே எதிர்பார்த்த ஒன்று தான். எதிர்பார்த்தபடியே சமச்சீர் கல்விக்கு சமாதி கட்டியாச்சி..!                                                                                                       

கருத்துகள் இல்லை: