வெள்ளி, 15 ஜூலை, 2011

தேசத்தை நேசிப்பவரை நேசமுடன் வாழ்த்துகிறோம்...

 தோழர் சங்கரய்யாவுக்கு  இன்று வயது 90                                          
        
           சுதந்திர போராட்ட வீரரும், தமிழகப் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் இன்று 90-வது பிறந்த நாள் காண்கிறார்.
        மாணவப் பருவத்தில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதில் துவங்கிய அவரது தூய பொது வாழ்க்கை இன்றும் தொய்வின்றித் தொடர்கிறது.
       விடுதலைப் போராட்டத்தின் போதும், அதன் பின்னரும் சிறைவாசம்- சதி வழக்குகள்- அடக்கு முறைகளை இன்முகத்துடன் எதிர்கொண்டவர்.
       மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர்- மத்தியக்குழு உறுப்பினர்- தீக்கதிர் ஆசிரியர் என தரப்பட்ட பொறுப்புக்களை திறம்பட நிறைவேற்றியவர். செம்மலர் இலக்கிய ஏடு- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக மூல வித்துக்களில் ஒருவராக இருந்தவர்.
    மேடையில் ஏறினால் கோடை இடி - நேசத்தோடு பழகுவதில் முல்லைக்கொடி!
         இன்றும் சுடர்விடும் தேசபக்தி, தளராத தமிழ்க்காதல், களங்கமற்ற பொதுவாழ்க்கை எனத் தொடரும் தொண்டறத்தால் இன்றும் என்றும் அவர் இளைஞர்தான்.
        தேசத்தை நேசிப்பவரை  நேசமுடன் வாழ்த்துகிறோம்...  
வாழ்க பல்லாண்டு....                                                                                     

2 கருத்துகள்:

Rathnavel சொன்னது…

ஐயா அவர்களுக்கு மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

புதுவை ராம்ஜி சொன்னது…

Rathnavel ஐயா, தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி...