சனி, 4 மே, 2013

புதுச்சேரியில் ரங்கசாமி ஆதரவோடு வன்னியர் சங்கம் ''பந்த்''....!



               நேற்று 03.05.2013 அன்று புதுச்சேரியில் ''பந்த்'' நடத்தினாங்க...பந்த்ன்னா பந்த்.. அப்படியொரு பந்த்ங்க... இதுவரைக்கும் அப்படி நடந்ததேயில்லை... கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளும்  எல்லாம் மூடப்பட்டிருந்தன.... பெட்ரோல் பங்க்கள் கூட மூடப்பட்டிருந்தன... அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை... பேருந்து நிலையமே வெறிச்சோடி கிடந்தது. ஆட்டோகளும் டெம்போகளும் சுத்தமா ஓடவில்லை. ஊரே நிசப்தமாக காணப்பட்டது.  போலீச்காரங்கக் கூட கண்ணுல படவேயில்லை... அந்த அளவுக்கு ''நேர்மையான'' ''ஒழுக்கமான'' பந்த்ன்னா பாத்துக்கோங்களேன்... 100 சதவீதம் வெற்றின்னு சொல்லலாம்...
           இந்த பந்த் எதற்காகன்னு தெரியுமா..? நம்ம விடுதலைப் போராட்ட வீரரு... பாட்டாளி ஏழை மக்களுக்காகவே வாழ்க்கைய அர்ப்பணிச்சவரு... தவறான முறையில சொத்து சேர்க்காதவரு... நேர்மையான முறையில மருத்துவ பட்டம் பெற்றவரு... இப்படியே... அண்ணன் நல்லவரு... பெண்டு எடுக்கிறதுல வல்லவருன்னு... நெறைய அடுக்கிக்கிட்டே போகலாம்.... அவர்தானுங்க.. உலக மகா யோக்கியரு.... இராமதாசு... இவரு சென்ற சித்திரா பவுர்ணமியன்று மகாபலிபுரம் கடற்கரையில உப்பு காய்ச்ச போனாருங்க... போன இடத்துல தலித் மக்களை காய்ச்சி காய்ச்சின்னு காய்ச்சிட்டாருங்க... இதுல வேற தைரியமிருந்தா தமிழக அரசு கைது பண்ணிப் பாக்கட்டுமே...என்று சவால்  வேற விட்டிருக்காருங்க... அவ்வளவு தான் அம்மா அய்யாவை புடிச்சி உள்ள வெச்சிட்டாங்க... இப்ப ஜெயில்ல இருக்கிற டாக்டர் அய்யாவுக்கே இன்னொரு டாக்டரு மருத்துவம் பார்க்கிற மாதிரி ஆகிப்போச்சிங்க....
         இது நடந்ததோ தமிழ்நாட்டுல... ஆனா அவரது ''தொண்டர் அடிபொடிகள்'' நேற்று புதுச்சேரியில மட்டும் ''பந்த்'' நடத்தினாங்க.... இந்த பந்த்க்கு தான் இவ்வளவு புதுச்சேரியில என்ன வரவேற்பு... எதுவுமே செயல்படாம புதுச்சேரியே ஸ்தம்பித்து போயிட்டது... ஆனால் இதெல்லாம் ஏதோ பொது மக்களே தானாக கொடுத்த ஆதரவு இல்லை... இராமதாசின் ''தொண்டர் அடிபோடிகளின்'' அடாவடித்தனத்திற்கும், ரவுடித்தனத்திற்கும் பயந்து தான் இப்படி செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்...
           இதுல இன்னொரு உண்மையும் இருக்கிறது.... இந்த அளவுக்கு ஒரு பந்த் வெற்றிபெற்றிருக்கிறது என்றால், அதற்கு ஆட்சியாளர்களின் ஆதரவில்லாமல் வெற்றி பெறாது என்பதையும் மக்கள் தெரிந்து தான் வைத்திருக்கிறார்கள்.  இந்த முழு வெற்றிக்கும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி காட்டிய ''ஜாதிய பாசம்'' தான் காரணம் என்பதையும் மக்கள் புரிந்து தான் வைத்திருக்கிறார்கள்...

1 கருத்து:

Unknown சொன்னது…

புதுவை மாநில முதல்வர் அத்தகையவர் அல்ல இது உங்கள் காழ்புணர்ச்சி என்று எனக்கு தோன்றுகிறது ...