செவ்வாய், 5 மார்ச், 2013

மோடி முகத்தில் கரியை பூசிய அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர்களும்...!


                     அமெரிக்கா நாட்டின் பிலடெல்பியாவில் உள்ள  புகழ் பெற்ற பல்கலைக்கழகமான "வர்டன் வர்த்தக பள்ளி பல்கலைக்கழகம்'' வருகிற மார்ச் மாதம் 23 - ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ள ''17th - Wharton India Economic Forum" என்ற மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து மாண்டேக் சிங் அலுவாலியா, மத்திய அமைச்சர் அமைச்சர் மிலிந்த் தியோரா மற்றும் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி ஆகிய ''பொருளாதார மேதைகள்'' அழைக்கப்பட்டிருந்தனர். அழைப்பிதழும் அனுப்பப்பட்டுவிட்டது. சம்பந்தப்பட்ட பலகலைக்கழகத்தின் வலைத்தளத்திலும் நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுவிட்டது. ஏற்கனவே நரேந்திர மோடி அமெரிக்கா வருவதை விரும்பாத அமெரிக்க அரசாங்கம் மோடிக்கு விசா வழங்க மறுத்துவரும் சூழ்நிலையில், மோடியால் நேரடியாக அந்த பல்கலைக்கழகம் வந்து உரையாற்ற முடியாது என்கிற சூழ்நிலையில், மோடி மட்டும் இந்தியாவில் இருந்தபடியே ''வீடியோ கான்பெரென்ஸ்'' மூலம் அந்த அமெரிக்க பல்கலைக்கழக மாநாட்டில் நேரடி ஒளிபரப்பு செய்வது என்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டது.
         ஆனால் இதற்கிடையில் அந்த வர்டன் வர்த்தக பள்ளி பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் குஜராத் முதலமைச்சர் மோடி கலந்துகொள்வதை விரும்பாததால் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொண்டு மோடியின் உரையை நீக்கும்படி போராடினார்கள். அதன் விளைவாக நிர்வாகமும், மாநாட்டு சிறப்பு பேச்சாளர்கள் பட்டியலிலிருந்து மோடியை விளக்கி தகவல் கொடுத்துள்ளது. மோடிக்கு பதிலாக ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் கஜ்ரிவால் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருக்கிறார்.
         வருகிற 2014 பாராளுமன்றத் தேர்தலில் தன்னை பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளாராக கனவு கண்டுகொண்டிருக்கும் மோடியின் முகத்தில் அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் கரியை பூசி விட்டிருக்கின்றனர். இது தான் மோடியின் யோக்கியதை என்பதை பாரதீய ஜனதாக் கட்சியும், மோடியும் புரிந்துகொள்ளவேண்டும். சர்வதேச அளவில் மோடிக்கு என்ன மரியாதை இருக்கிறதோ அது தான் இந்தியா முழுதும் இருக்கிறது என்பதையும் கட்டாயம் புரிந்துகொள்ளவேண்டும்.

3 கருத்துகள்:

சங்கர் ಶಿವಮೊಗ್ಗ சொன்னது…

காங்கிரஸ் காரர்கள் யோக்கியதை மட்டும் பட்டொளி
வீசி பறக்கிறதா

பெயரில்லா சொன்னது…

அதுதான் அமெரிக்கா! அதுதான் அமெரிக்க மனிதாபிமானம்!! அதுதான் அமெரிக்க மனித உரிமை!!! ஒரு பல்கலைக்கழக மாணவர்கள் சிலரின் குரலுக்கு எவ்வளவு மரியாதை பாருங்கள்.

ஆனால் நமது இந்தியா (காந்தி தேசம் எனவும் அழைப்பார்கள்) மனிதப்படுகொலையாளன் (125,000 தமிழர்) மகிந்தாவுக்கு செங்கம்பளம் விரித்து வரவேற்பு!

Raamji சொன்னது…

ஏன் இந்த வெட்கமற்ற பதிவு Raamji