சனி, 2 மார்ச், 2013

பெரியாரை காற்றில் பறக்கவிட்ட திராவிட முன்னேற்றக் கழகம்...!         ''பெரியாரின் கையைப் பிடித்து வளர்ந்தவன் நான்''  என்று தன்னைப் பற்றி அடிக்கடி சொல்லிக்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியும், அவரது குடும்பமும், கட்சியும் இன்றைக்கு, ''மானமும் அறிவும் மனிதற்கு அழகு'' என்று சொன்ன தந்தைப் பெரியாரையும், அவரது பகுத்தறிவுக் கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அறிவையும், மானத்தையும் வேட்டித் துண்டைப் போல் கழட்டி வைத்துவிட்டார்கள். பாவம், பேராசிரியர் அன்பழகன் மட்டும் நடப்பதைப் பார்த்து தலைகுனிந்து உட்கார்ந்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: