திங்கள், 2 டிசம்பர், 2013

மதம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் மடாதிபதிகளும் காப்பாற்றப்படவேண்டும்...!



             காஞ்சி சங்கரராமன் கொலைவழக்கில், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் உள்ளிட்ட பெரிய மற்றும் சின்ன சங்கராச்சாரிகள் உட்பட 23 பேர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அனைவரும்  குற்றவாளிகள் என்று வெளிப்படையாகவே  தெரிந்திருந்தும் புதுச்சேரி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
            அந்த காஞ்சி வரதராஜ பெருமாளே நேரில் வந்து சாட்சி சொன்னாலும் - தன்னை யார்  கொலை  செய்தது என்று சங்கரராமனே நேரில் வந்து சொன்னாலும் இது தான் தீர்ப்பாக இருக்கும் என்பது எழுதப்படாதத் தீர்ப்பு என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஏனென்றால் இவர்களைப் போன்ற மடாதிபதிகளும் சாமியார்களும் காப்பாற்றப்பட்டால் தான் மதம் காப்பாற்றப்படும். மடாதிபதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால், மதத்தின் மீதான - கடவுள்கள்  மீதான நம்பிக்கைகளையும் மக்கள் இழந்துவிடுவார்கள் என்ற அச்சம் மதவாதிகளுக்கும், மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்களுக்கும், மதத்தினால் வாழும் முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் உண்டு என்பது தான் உண்மை. 
           மதங்கள் - கடவுள்கள் - மடாதிபதிகள் மீது மக்களின் நம்பிக்கை அழிந்துபோனால், மதங்களும், கடவுள்களும் அழிந்து போகும். மதங்களும் கடவுள்களும் அழிந்து போனால் அவைகளால் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் அழிந்து போகும். பிறகு கம்யூனிசம் வளர்ந்துவிடும். அதனால் தான் இன்று வரையில் எந்த மதத்தலைவர்களோ, மடாதிபதிகளோ அல்லது   சாமியார்களோ   செய்த  குற்றங்களுக்காக அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா என்று கேட்டால்...? அதற்கு இல்லை என்பது   தான்  நிருபிக்கப்பட்ட உண்மை. அதனால் தான் இந்த இரு சங்கராச்சாரிகளும் விடுவிக்கப்பட்ட தீர்ப்பைக்கேட்டு பிஜேபி கட்சியை சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜும், சுப்பிரமணியசாமியும் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
            ஒரு காலத்தில் ஒரு மேல்சாதிக்காரனோ  அல்லது வசதிபடைத்தவனோ    கொலை குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றம் சென்றால், என்ன தான் சாட்சிகள் இருந்தாலும், ''வெள்ளையா இருக்கிறவன் கொலை செய்யமாட்டான்'' என்றும், ''வசதிபடைத்தவன் கொலை செய்யமாட்டான்'' என்றும்  தான் நீதிமன்றம் தீர்ப்பு எழுதி இருக்கிறது  என்பது தான் இந்த நாட்டின் வரலாறு.  இப்போது காலப்போக்கில் நீதிமன்றத் தீர்ப்புகள் பரிணாமவளர்ச்சி அடைந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ''வெள்ளையா இருக்கிறவன் கொலை செய்யமாட்டான்... பூணூல் போட்டவன் கொலை செய்யமாட்டான்'' என்று சொல்லாமல் ''குற்றம் நிரூபிக்கப்படவில்லை.... அவால்லாம் உத்தமபுத்திரர்கள் தான்'' என்று மாற்றி சொல்லியிருக்கிறார்களே தவிர தீர்ப்பு மாறவில்லை.
            எனவே முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், மதமும் கடவுள்களும் காப்பாற்றப்பட வேண்டும். மதமும் கடவுள்களும் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் மடாதிபதிகளும், சாமியார்களும் காப்பாற்றப்பட வேண்டும் இன்றைய எழுதப்படாத சட்டம்.       

2 கருத்துகள்:

mathuran சொன்னது…

இந்த மூஞ்சிகளில் அருளொளியா வீசுகிறதாம். இதுகள் லோக குருவாம், ஜகத் குருவாம்.
இந்தோனேசியக் காட்டில் வாழும் ஒரங் உட்டான் குரங்கு போல் இருகிறது; பெரிசின் மூஞ்சி.அக்குரங்கின் முகத்தில் கூட ஒரு கனிவு இருக்கும்...
இந்த மூஞ்சியைத் தரிசிக்கவா காஞ்சிக்கு ஓடுகிறார்கள்.
ஒரு தூய ஆத்மீகவாதியை முகம் காட்டும். இவர்கள் இருவருமே கேடிகள் என்பது முகத்தில் தெரிகிறது.
நீதிபதிக்குத் தெரியவில்லையா?
இவர்களுக்கு முன் ஒரு 4 அறைப் பெட்டி கொண்டு செல்கிறாரே ஒருவர்.அப்பெட்டியுள் உள்ளதென்ன?

mathuran சொன்னது…

இந்த மூஞ்சிகளில் அருளொளியா வீசுகிறதாம். இதுகள் லோக குருவாம், ஜகத் குருவாம்.
இந்தோனேசியக் காட்டில் வாழும் ஒரங் உட்டான் குரங்கு போல் இருகிறது; பெரிசின் மூஞ்சி.அக்குரங்கின் முகத்தில் கூட ஒரு கனிவு இருக்கும்...
இந்த மூஞ்சியைத் தரிசிக்கவா காஞ்சிக்கு ஓடுகிறார்கள்.
ஒரு தூய ஆத்மீகவாதியை முகம் காட்டும். இவர்கள் இருவருமே கேடிகள் என்பது முகத்தில் தெரிகிறது.
நீதிபதிக்குத் தெரியவில்லையா?
இவர்களுக்கு முன் ஒரு 4 அறைப் பெட்டி கொண்டு செல்கிறாரே ஒருவர்.அப்பெட்டியுள் உள்ளதென்ன?