சனி, 22 ஜூன், 2013

நரேந்திர மோடியும், அமைதிப்படை அமாவாசையும்.....!

                    அண்மைக்காலமாகவே பிரதமர் பதவிக்கு அலையற நரேந்திர மோடியை பார்க்கும் போது சத்யராஜ் - மணிவண்ணன் நடித்த அமைதிப்படை - 1 -இல் அமாவாசையாக நடிக்கும் சத்யராஜ் தான் என் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த படத்தில் அமாவாசை சத்யராஜ் தேங்காய் பொறுக்கும் ஒரு சாதாரண தெருப் பொறுக்கியாக இருந்து ஒரு கட்சித்தலைவராக இருக்கும் மணிவண்ணனிடம் சேர்ந்து மணிவண்ணனையே மிஞ்சி அவருக்கு கிடைக்க வேண்டிய எம்.எல்.ஏ பதவியை பறித்துக்கொள்வது வரை அனைத்து காட்சிகளும் நரேந்திர மோடியுடன் ஒத்துப்போகிறது. அந்தப் படத்தில் சத்யராஜ் காட்டுகிற அப்பாவித்தனம், தன்னை ஏற்றிவிட்ட தன்னுடைய தலைவனையே ஓரங்கட்டுவது, கடைசியில் தான் ஒரு தலைவனாய் மாறிவிடுவது போன்ற எல்லாக் காட்சிகளும் தற்சமயம் நரேந்திர மோடிக்கு அப்படியே பொருந்தும். மோடி தானாகவே தன்னை பிரதமர்   வேட்பாளராக அறிவித்து கொண்டு வலம் வர ஆரம்பித்ததில் இருந்து, அண்மையில் கோவாவில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பி.ஜே.பி.-யின் தேர்தல் குழுவின் தலைவாரனது வரை மோடியின் முகத்திலும் நடிப்பிலும் அப்படியே அமைதிப்படை அமாவாசையை தான் நினைவுப்படுத்துகிறது. அந்த கோவா செயற்குழுக் கூட்டத்தில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல அடக்கம் ஒடுக்கமா ஒரு அப்பாவி போல உட்கார்ந்துகொண்டு இருந்தார். அது மட்டுமல்ல வரும் 2014 - பாராளுமன்றத்தேர்தலுக்கான தேர்தல் குழுத்தலைவராக  கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இவர் பெயரை அறிவிக்கும் போது, செயற்கையான சிரிப்பையும், அப்பாவித்தனமான முகத்தையும் கலவையாக்கி  வெளிப்படுத்தி அமைதிப்படை சத்யராஜ் மாதிரி தலைக்கு மேலே கையை உயர்த்தி சுற்றி வந்து வணக்கம் சொன்னாரு பாருங்க... அடேங்கப்பா... என்னா நடிப்புங்கடாங்கப்பா... கொய்யால... தாங்கமுடியல... அந்த காட்சியை பார்க்கும் போது ரோட்டில் தேங்காய் பொறுக்கித் தின்றுகொண்டு, போக்கிரித்தனமாய் திரிந்து கொண்டிருந்த அமாவாசை என்ற சத்யராஜ் வெளிப்படுத்திய அப்பாவித்தனம் தான் நம் நினைவிற்கு வருகிறது. அதுமட்டுமல்ல தன்னுடைய மூத்த தலைவர் அத்வானியையே ஓரங்கட்டிவிட்டு முன்னேறுவதைப் பார்த்தால் அமைதிப்படை அமாவாசைக்கும், நரேந்திர மோடிக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

2 கருத்துகள்:

Sabareesan சொன்னது…

//ஒரு கட்சித்தலைவராக இருக்கும் மணிவண்ணனிடம் சேர்ந்து மணிவண்ணனையே மிஞ்சி அவருக்கு கிடைக்க வேண்டிய எம்.எல்.ஏ பதவியை பறித்துக்கொள்வது வரை//

இப்படிப்பட்ட வரலாறு இல்லாத ஒரே ஒரு தலைவரை அடையாளம் காட்ட முடியுமா?

பெயரில்லா சொன்னது…

இடதுசாரி தலைவர்கள்.