சனி, 6 அக்டோபர், 2012

இடதுசாரிக் கட்சிகளின் எம். பி.- களை புதுச்சேரி எல். ஐ. சி முகவர்கள் சந்திப்பு...!

          புதுச்சேரியில் நடைபெறும் அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி வந்திருக்கும் இடதுசாரிக் கட்சித் தலைவர்களை அகில இந்திய எல். ஐ. சி. முகவர்கள் சங்கத்தைச் சேர்ந்த புதுச்சேரி தோழர்கள்  ஆர். எம். ராம்ஜி தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து மனு ஒன்றையும்  அளித்தனர்.
            இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உயர்வுக்கு எதிராக மனு ஒன்றை தயார் செய்து பாராளுமன்ற இரு அவைகளையும் சார்ந்த உறுப்பினர்களுக்கு அளிக்கவேண்டும் என்று ''லிகாய்'' முகவர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைமை விடுத்த  அறைகூவலின்படி புதுச்சேரி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர். சீதாராம் யெச்சூரி அவர்களிடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர். நிலோத்பல் பாசு அவர்களிடமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர். து. ராஜா அவர்களிடமும், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீடு உயர்வுக்கும், பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கும் எதிர்ப்புத் தெரிவித்தும், பாராளுமன்றத்தில் இவைகள் சம்பந்தமான இடதுசாரிக் கட்சிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும்   மனுக்கள்  அளிக்கப்பட்டன.
                இந்த சந்திப்பின் போது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசச் செயலாளர் தோழர். வி. பெருமாள் அவர்களும், லிகாய் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர். குணசேகரன், வேலூர் கோட்டச்சங்கப் பொருளாளர் சற்குணராஜ், புதுச்சேரி கிளை - 1 - இன் தலைவர் தோழர். கலையரசி, செயலாளர் தோழர். ஆனந்த், கிளை - 2 - இன்  தலைவர் தோழர். அன்பரசி, செயலாளர் தோழர். புஷ்பராஜ், பொருளாளர் தோழர். சேதுராமன் உள்ளிட்ட பலத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
                    
இன்னும் புகைப்படங்கள் வரும் ... 

கருத்துகள் இல்லை: