வெள்ளி, 5 அக்டோபர், 2012

புதுச்சேரியில் சர்வதேச அமைதி மற்றும் ஒற்றுமை மாநாடு...!

             புதுச்சேரியில் அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அமைப்பின் தேசிய மற்றும் சர்வதேச மூன்று நாள் மாநாடு இன்று காலை புதுச்சேரி  கம்பன் கலையரங்கில் தொடங்கியது. இந்த மாநாட்டை  மாநாட்டு அமைப்புக்குழுவின் தலைவரும் புதுச்சேரி மாநில முதலமைச்சருமான என்.ரங்கசாமி வெண்புறாக்களை பறக்கவிட்டு தொடங்கிவைத்தார். 
            மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர். சீதாராம் யெச்சூரி அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர். 
து. ராஜா  அவர்களும் சிறப்புரையாற்றினர். இன்றையிலிருந்து மூன்று நாட்கள் புதுவையின் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. 


      
        கியூபா, வியட்நாம், நேபாள், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை  உள்ளிட்ட 35 நாடுகளிலிருந்தும், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களிலிருந்தும் என சுமார் 300 பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். கடைசியாக சென்ற 2007 - ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் மாநாட்டினை நடத்திய இந்த அமைப்பு, சென்ற 1951 - ஆம் ஆண்டு அன்றைய பிரதமாரான நேரு அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் நிறைய தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட உள்ளது.     

கருத்துகள் இல்லை: