வியாழன், 2 பிப்ரவரி, 2012

குழாயடி சண்டையாக மாறிய தமிழக சட்டமன்ற விவாதம்....!
                சட்டமன்றத்தில் நடந்த விவாதம் திடீரென்று திசை மாறி,  குழாயடி சண்டையாக மாறிப்போனது என்பது அனைவரும் அறிந்ததே. இன்று தமிழக அரசு பத்திரிக்கைகளுக்கு கொடுக்கப்பட்ட புகைப்படங்கள்  இரண்டும் எதிர்கட்சித்தலைவர்  விஜயகாந்தை குறை கூறுவதற்காகவே கொடுக்கப்பட்ட புகைப்படங்கள். 
              ஜெயலலிதா பாணியிலேயே சொல்லவேண்டும் என்றால், ஜெயலலிதாவிற்கு திராணி இருந்தால், ஆளுங்கட்சியினர் பக்கம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கலாமே. அதை ஏன் வெளியிடவில்லை...?  தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும், எதிர்கட்சித்தலைவரும் செய்த அரசின் மீதான விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல், கோபத்தோடு சீறிய  அவரின் முகத்தையும் காட்டியிருக்கலாமே...? 
            இதை நான் கேட்கவில்லை.... இது மக்களின் குரல்...!

கருத்துகள் இல்லை: