செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

தியாகபூமி நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு - சிறப்பு மலர் -1

மாநாடு எதிர்கால தமிழகத்திற்கு வழி காட்டட்டும் - ஒளி ஏற்றட்டும்
          மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20 - வது மாநாடு நாகப்பட்டினத்தில் வெண்மணி நகர், தோழர் ஜோதிபாசு அரங்கத் தில் (லலிதா மகால்) பிப்ரவரி 22 புதன்கிழமை கோலாகலமாகத் துவங்குகிறது. மகத்தான இந்த மாநாடு பிப்ரவரி 22 முதல் 25 வரை 4 நாட்கள் உற்சாகப் பேரெழுச்சியோடு நடைபெறுகிறது. பிப்ரவரி – 25 பிற்பகல் 2 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டப் பேரணியும் மாபெரும் பொதுக்கூட்டமும் நடை பெறுகின்றன.

கொடியேற்றம் - – சேர்ந்திசை
            பிப்ரவரி 22 காலை 9 மணிக்கு, நாகை அபிராமி அம்மன் திருவாசல் முன்பு, 20வது மாநாட்டைக் குறிக்கும் வண்ணம் 20 செங்கொடிகளைத் தலைவர்கள் ஏற்றுகிறார்கள். அப்போது சென்னை ‘பீட்’ இசைக்குழுவினரின் சேர்ந்திசைப் பாடல்கள் எழுச்சியுடன் ஒலிக்கும்.

பொது மாநாடு

                    தொடர்ந்து தோழர் ஜோதி பாசு அரங்கத்தில் (லலிதா மகாலில்) பொது மாநாடு துவங்குகிறது. தோழர் லீலாவதி நினைவுக் கொடியை மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் பெற்றுக்கொள்கிறார். வெண்மணி தியாகிகள் ஜோதியை முதுபெரும் தலைவர் கோ. வீரய்யன் பெறுகிறார். சேலம் சிறைத் தியாகிகள் ஜோதியை முதுபெரும் தலைவர் ஏ.அப்துல் வஹாப் பெறுகிறார். மத்தியக்குழு உறுப்பினர் ஆர். உமாநாத் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து தலைமைக்குழு தேர்வு நடை பெறுகிறது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ, அஞ்சலி தீர்மானம் முன்மொழிகிறார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும், மாநிலக்குழு உறுப் பினருமான வி.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றுகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.

                சிபிஐ மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்துரை வழங்குகிறார். மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் நூல் வெளியிடுகிறார். தொடர்ந்து மூத்த தோழர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிரதிநிதிகள் மாநாடு

                                    அன்று மதியம், 12 மணிக்கு மாநாட்டுக்குழுக்கள் தேர்வு நடைபெறுகிறது. மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை சமர்ப்பிக்கிறார்.

              இதைத்தொடர்ந்து பிப்ரவரி 22 மாலை 5 மணி முதல் பிப் ரவரி 25 பிற்பகல் 2 மணி வரை பிரதிநிதிகள் விவாதம் – நடை பெறுகிறது. இதைத் தொடர்ந்து, மாநிலச் செயலாளர் தொகுப்புரை வழங்குகிறார். பின்னர் புதிய மாநிலக்குழுத் தேர்வும், – அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகள் தேர்வும் நடை பெறுகின்றன.

          பிரதிநிதிகள் மாநாட்டின் நிறைவாக அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, கே.வரதராசன், பிருந்தா காரத், பி.வி.ராகவலு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் நிறைவுரை ஆற்றுகிறார்.
        வரவேற்புக்குழுச் செயலாளரும் நாகை மாவட்டச் செயலாளருமான ஏ.வி.முருகையன் நன்றியுரை ஆற்றுகிறார்.

பிரம்மாண்டப் பேரணி
              மாநாட்டில் நிறைவாக 5000 செந்தொண்டர்கள், அகில இந்திய - மாநிலத் தலைவர்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள், இயக்கத் தோழர்கள் என 2 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டப் பேரணி பிப்ரவரி 25 பிற்பகல் 3 மணிக்கு புத்தூர் அண்ணா சிலையில் இருந்து மேளதாள வாத்தியங்களுடன் புறப்படுகிறது.

மாபெரும் பொதுக்கூட்டம்

             அன்று மாலை 5 மணிக்கு பி.சீனிவாசராவ் திடலில் (வலி வலம் தேசிகர் பாலிடெக்னிக் திடல்) மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக, கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

            பொதுக்கூட்டத்திற்கு நாகை மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை ஏற்கிறார். மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றுகிறார். பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சிறப்புரை ஆற்றுகிறார். மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் என். சங்கரய்யா, மத்தியக்குழு உறுப்பினர் ஆர். உமாநாத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, முதுபெரும் தலைவர் கோ.வீரய்யன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன் எம். எல்.ஏ., கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆகியோர் எழுச்சியுரை ஆற்றுகிறார்கள்.

             மாநாட்டு வரவேற்புக்குழுப் பொருளாளர் நாகைமாலி எம்.எல்.ஏ. நன்றியுரை ஆற்று கிறார். தொடர்ந்து பொதுக் கூட்டத்தின் நிறைவாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை: