புதன், 22 அக்டோபர், 2014

முதல்ல பொண்டாட்டியோடு கொண்டாடுங்கள் மிஸ்டர் மோடி...!

                   
           நாளை பிரதமர் நரேந்திரமோடி அண்மையில் பயங்கர வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இன்றுவரையில் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் காஷ்மீர் மக்களோடு தீபாவளி கொண்டாடப்போறாராம். இது மோடியின் தீபாவளி கொண்டாட்டம் என்ற பெயரில் காஷ்மீர் இந்துகள் ஓட்டுகளை குறிவைத்து  மோடி நடத்தும் ''தேர்தல்  ஸ்டண்ட்'' என்பதை காஷ்மீர் மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் இருபது நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட இஸ்லாமியர்  பண்டிகையான பக்ரீத் பண்டிகையை   அவர்களோடு சேர்ந்து கொண்டாடியிருக்கலாமே. மோடி அப்படி செய்திருந்தால் நாம்  நெஞ்சார பாராட்டியிருக்கலாம். ஒரு மதசார்பற்ற நாட்டின் பிரதமராக செயல்படுகிறார் என்று போற்றியிருக்கலாம். அனால் அவர் எப்போதுமே இந்துத்துவாவை உயர்த்திப்பிடிக்கும் சேவக் என்பதைத்தான் அவ்வப்போது தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறார். அதனால் தான் குடியரசு தலைவர் ஏற்பாடு செய்த ரமலான் நோன்பு கொண்டாட்டத்தில் கூட பிரதமர் என்ற முறையில் கூட கலந்துகொள்ள இவருக்கு பரந்த மனமில்லாமல் போனது. 
            பிரதமர் அவர்களே.... நீங்கள் இந்தியா என்ற ஒரு மதசார்பற்ற நாட்டின் பிரதமர் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். அதை விடுத்து, நவராத்திரி விழாவை அனுமாரோடு கொண்டாடுறது... தீபாவளி திருநாளை ஸ்ரீநகர் மக்களோடு கொண்டாடுறதுன்னு உங்கள் இந்துத்துவ அடையாளங்களை அடிக்கடி வெளிப்படுத்திக்கொண்டிருக்காதீர்கள். முதல்ல பண்டிகையை பொண்டாட்டியோடு கொண்டாடுங்கள் மிஸ்டர் மோடி...!

1 கருத்து:

vijayan சொன்னது…

கரைவேட்டிகளைவிட கேவலமாய் போய்விட்டார்கள் நம்ம ஊரு காம்ரேடுகள்.