திங்கள், 6 அக்டோபர், 2014

அமெரிக்காவில் மோடிக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பு அலை...!

            பிரதமர் நரேந்திரமோடி சென்ற வாரம் ஐந்து நாள் சுற்றுப்பயணம் சென்றபோது ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் ஆஹா...ஓஹோவென்று பிரச்சாரம் செய்தன. ஆனால் இன்னொரு பக்கம் மோடிக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்களும், அமெரிக்கர்களும் போராட்டத்தில் இறங்கியதை எந்த ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் திட்டமிட்டு மறைத்துவிட்டன. மோடி சென்ற பாதைகள் எங்கும் ஏராளமான இந்தியர்களும் அமெரிக்கர்களும் அவருக்கு எதிராக வாசகங்கள் கொண்ட பலகைகளை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பினர். இவைகளெல்லாம் மறைக்கப்பட்டன. நியூயார்க் நகரில் உள்ள மாடிசான் சதுக்க தோட்டத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் இந்திய மூத்த பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மோடியின் வருகையைப் பற்றி நேர்காணல் நடத்திக்கொண்டிருந்த போது மோடிக்கு எதிரான தகவல்களை மக்கள் வெளிப்படுத்துவதை கண்டு ஆத்திரமடைந்த மோடியின் ஆதரவாளர்கள் பத்திரிக்கையாளருக்கு எதிரான தாக்குதலையும் நடத்தினர். தன்னுடைய நாட்டின் பத்திரிக்கையாளர் அமெரிக்காவில் தாக்கப்பட்டார் என்பதற்காக மோடி துளியும் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் எந்த பத்திரிக்கையும் வருத்தம் தெரிவிக்கவில்லை.  இதோ நீங்களும் பாருங்கள் மோடிக்கு கிடைத்த ''வரவேற்பை''    
கருத்துகள் இல்லை: