திங்கள், 20 அக்டோபர், 2014

மகாராஷ்டிரா மாநிலத்தில் பூத்த ஒரே செம்மலர்...!

            
           நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தேர்தலில் அம்மாநில மக்கள் கடந்த காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தியை தனக்கு சாதகமாக அறுவடை செய்துகொண்ட பாரதீய ஜனதாக்கட்சியால்,  மத்தியில் ஆட்சிக்கு வந்து ஆறே மாதத்தில் மக்களுக்கு தங்கள் மீது ஏற்பட்ட அதிருப்தியை இந்திய - பாகிஸ்தான் எல்லை மோதலை படம்பிடித்துக்  காட்டி திசைத்திருப்பி வாக்குகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அதிருப்தியிலிருந்த மக்கள் ஆட்சியமைக்கும் அளவிற்கு யாருக்கும் முழு மெஜாரிட்டி தரவில்லை என்பது தான் உண்மை. பா.ஜ.க.-விற்கு அடுத்து சிவசேனா, காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் மக்கள் சிறு சிறு இடங்களில் வெற்றிபெற செய்திருக்கிறார்கள். 
              இப்படிப்பட்ட சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அனைத்து இடதுசாரி கட்சிகளும் ஒன்றுபட்ட கூட்டணி இத்தேர்தலில் போட்டியிட்டதில், கல்வான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர். ஜிவபந்து கேவிட் என்ற  ஜே.பி.கேவிட் மகத்தான வெற்றிபெற்றிருக்கிறார். அதிலும் இந்த தொகுதி  பழங்குடியினர் தனி  தொகுதி என்பது பெருமைப்படத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் பழங்குடி மக்களின் நேசத்திற்குரிய தலைவருமான தோழர். ஜே.பி.கேவிட் ஏற்கெனவே ஆறு முறை இதேத் தொகுதியில் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதி மறுசீரமைக்கப்பட்டதால் கடந்த முறை மட்டும்   அவர் தோல்வி அடைந்திருந்தார். தற்போது ஏழாவது முறையாக வெற்றி வாகை சூடி 67,795 வாக்குகள் பெற்றுள்ள ஜே.பி.கேவிட், தன்னை அடுத்து வந்த தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜுன் துளசிராம் பவாரைவிட 4,786 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார்.பா.ஜ.க மூன்றாவது இடத்தையும், சிவசேனா நான்காவது இடத்தையும், காங்கிரஸ் கட்சி ஐந்தாவது இடத்தையும் பெற்றன. 
                கல்வான் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்ற - மகாராஷ்டிரா மாநிலத்தில் பூத்த ஒரே செம்மலர் தோழர்.ஜே.பி.கேவிட் அவர்களை பாராட்டுகிறோம். நெஞ்சார வாழ்த்துகிறோம். தோழருக்கு வாக்களித்த கல்வான் தொகுதி மக்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Great.

Still CPI/CPM are alive....

no word to express.....

Seshan/Dubai