சனி, 9 பிப்ரவரி, 2013

இன்னும் எத்தனைக் காலம் தான் தமிழர்களை ஏமாற்றுவார் கருணாநிதி...?

திமுக தலைவர் கருணாநிதி இன்னும் எத்தனைக் காலங்களுக்கு தான் தமிழர்களை ஏமாளிகளாகவே நினைத்துக்கொண்டிருப்பார் என்று தெரியவில்லை. மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டே, இலங்கை அதிபர் இராஜ பட்செவின் வருகையை எதிர்த்து தனது கூட்டாளிகளுடன் கருணாநிதி கறுப்புடை அணிந்து போராட்டம் நடத்துவதை பார்க்கும் போது தமிழர்களை ஏமாளிகளாக நினைத்துக்கொண்டிருக்கும் கருணாநிதி கோமாளியாய் தெரிகிறார்.

2 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

தமிழர்க்கு எதிரி யார் ? ராஜபக்சேவும், ராஜ பக்சேவுக்கு ஒத்து ஊதுபவர்களும் தான் என்பதை உணர்ந்து செயல் பட வேண்டாமா?

எதிரும் புதிருமான உலக நாடுகள் ஈரான் இசுரேல், அமெரிக்கா ருசியா, இந்தியா பாகிஸ்தான் இவை அனைத்தையும் ஏமாற்றி ராஜபக்சே அவை அனைத்தும் மற்றும் சீனாவிடமிருந்தும் பெரும் உதவி பெற்று தமிழினத்தை அழித்துக் கொண்டுள் ளான்.இப்போது தான் சில உலக நாடுகள் உண்மையை உணர்ந்து ராஜபக்சே கொடுங்கோலன், ஹிட்லரை விட மோசமான இன அழிப்புக்காரன் என்பதை உணர்ந்துள்ளனர். தமிழ், தமிழன் என்ற அடையாளமே இருக்கக் கூடாது என்பதைத் திட்ட மிட்டுச் செயல் படுத்தி வரும் ஆட்சி ராஜபக்சே குடும்பத்தின் கொடுங்கோல் ஆட்சி.இதற்கு எதிராக இருக்கும் சிங்களவர்களையும் துன்புறுத்தத் தயங்காத கொடுங்கோலன் என்பதைச் சிங்கள மக்களே உணரத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்துத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் தங்களுக்குள் வாதிட்டுக் கொண்டு யார் எதிரி என்பதில் குழம்பிக்கொண்டும், குழப்பிக் கொண்டும் இருப்பது முறையா? தேவையா? நல்லதா? எதிரி ராஜ்பக்சேவா தமிழ் உடன் பிறப்புக்களா?

உடன் பிறப்புக்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் வரும் நேரம் இதுவல்லவா? இதில் நூறு கட்சிகளை வைத்துக் கொண்டு நான் பெரியவனா நீ பெரியவனா என்று போட்டி போட்டுக் கொண்டிருப்பதால் யாருக்கு லாபம் ?

ஈழப் போராட்டத்தில்கடந்த கால செயல் பாடுகளைப் பேச ஆரம்பித்தால் அது ராஜபக் சேவுக்குத் தான் பயன்படும். இப்போது இந்தியா வையும், மற்ற நாடுகளையும் தமிழர்கள் பக்கம் கொண்டு செல்லவேண்டிய நல்ல தருணம், முக்கிய கால கட்டம்.இதை நன்கு பயன் படுத்தாமல் மீண்டும் தவறுகளைச் செய்து கொண்டே இருந்தால் ஈழத்தில் தமிழினம் அழிந்து விடும் என்பதை உணர்ந்து செயல் படுவோம் ! எதிரி ராஜபக்சே ! உடன் பிறப்புக்கள் அல்ல! இந்தியாவை மாற்று வோம். மற்ற நாடுகளை நம் பக்கம் திருப்புவோம்.

....உலகத் தமிழன்....

விவரம் அறிந்தவர்கள் உண்மையைப் பேசுபவர்கள் சொல்வார்கள்.தமிழ்நாட்டை ஒரு பொருட்டாக இந்திய அரசு மதிப்பதில்லை.அய்யா நெடுமாற்னோ,வைகோ வோ முதல்வராக இருந்திருந்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது.திரு வி பி சிங் சொன்னார்.தமிழ்நாடு கொந்தளித்தால் தான் எதுவும் நடக்கும் என்று.தனித்தனியே கூட்டம் போட்டு அவரவர் அறிப்பை சொரிந்து கொள்வதால் ஒன்றும் நடக்காது.

பெயரில்லா சொன்னது…

when out of power karuna reacts differently in each and every issue.who is backing rajapakse?....the indian congress govt!....who is backing congress.......karunanithi!!this not the case only in eezham tamils....look how he reacts during the time of crisis with neighbouring states of TN....he diverts attention of the people to diff issue....because his family runs business all over south...his daughter settled in karnataka to look after tv business....no issues should disrupt his money making process across south india....when cauvery issue is at peak...he talks abt eezham.....he will vote fr foreiegn investment in retail sector...then he jumps to farmer's issue.....until he secures powerful portfolio in future central govt to protect family's financial interest,...more dramas are on the way......!!