ஞாயிறு, 16 அக்டோபர், 2011

என்ன தான் அறிவியல் வளர்ந்தாலும் இன்னும் கடவுளை நம்பும் நம் நாட்டு விஞ்ஞானிகள் - நெஞ்சில் ஒரு நெருடல்

                 வழிபாடு என்பது ஒரு தனி மனிதன் சம்பந்தப்பட்டது தான்.. அது ஒரு தனி  மனிதனின் உரிமையும்  கூடத்தான்...
                 ஆனால் அண்மையில் நடந்த நிகழ்ச்சி... இஸ்ரோ - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்  சாதனையாக, நான்கு செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி - சி - 18  என்ற ராக்கெட்டை கடந்த 12 - ஆம் தேதி  இந்திய  விஞ்ஞானிகள் வெற்றிகரமான செலுத்தினார்கள். இந்த வெற்றிக்குப் பின்னால்  பல்வேறு விஞ்ஞானிகளும், அறிவியல் தொழில்நுட்ப வல்லுனர்களும், ஊழியர்களும், தொழிலாளர்களும்  இருக்கிறார்கள். அவர்களது கடுமையான உழைப்பும், சிந்தனையும், ஆராய்ச்சியும் அதில் நிரம்பிக் கிடக்கின்றன என்பது தான் உண்மை. 
             ஆனால், இஸ்ரோ - வின் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த ராக்கெட் செலுத்துவதற்கு முதல் நாள், ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தவேண்டும் என்று வேண்டிக்கொள்ள  திருப்பதி சென்று வழிபாடு செய்தார் என்பதும், வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின் நன்றி தெரிவித்து வழிபாடு செய்ய இன்று காலை திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டதும் பார்ப்பதற்கு நெஞ்சில் சற்று நெருடலாக தான் இருக்கிறது. 
             விஞ்ஞானமும், ஆராய்ச்சியும், கண்டுபிடிப்புகளும், அறிவியல் தொழில் நுட்பங்களும் எவ்வளவு தான் வளர்ந்தாலும், மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கையும், மூடபழக்கவழக்கங்களும் வளர்ந்துகொண்டு தான் இருக்கிறது. அறிவியல் வளர வளர, அதை விட வேகமாக இவைகள் வளர்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும். இதில் விஞ்ஞானிகளும் விதிவிலக்கல்ல என்பது தான் இஸ்ரோ தலைவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும்  டாக்டர் மாதவன் நாயர் போன்றோர் செய்யும் செயல்களை பார்க்கும் பொது தோன்றுகிறது.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

kadavul illai enpathu ungal nambikkai entral kadavul irukkirar enbathu avar nambikkai.

Kaliyan Ganesan சொன்னது…

kadavul illai enbathu ungal nambikkai kadavul illai enbathu avar nambikkai.

kumaresan சொன்னது…

இயற்கையின் விதிகளை ஆராய்ந்து உண்மைகளைக் கண்டுபிடித்து அதனை மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவோரே விஞ்ஞானிகள். எடுத்துக்காட்டாக நியூட்டன் புவியீர்ப்பு விசை இருப்பதைக் கண்டுபிடித்ததால்தான் அதை மீறிச்செல்லும் விமானங்க்ளும் ராக்கெட்டுகளும் உருவாகின.

இவர்கள் விஞ்ஞானிகள் அல்ல. ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளையும் தொழில்நுட்பங்களையும் கையாளத் தெரிந்த வல்லுநர்கள், அவ்வளவுதான்.