புதன், 3 ஏப்ரல், 2013

மம்தாவின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை....!

''பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்'' என்ற பாரதியின் வரிகளுக்கு உதாரணமாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் மம்தா பானர்ஜியின் இரத்தவெறி இன்னும் அடங்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களையே காட்டுமிராண்டித்தனமாக தாக்கி இரத்தம் குடித்து அவர்களின் உயிரை பறிக்கும் வேலையையே தன் முதல் பணி  என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் மம்தாவின் கொலைவெறித் தாக்குதல்களுக்கு மாணவர்களும் தப்பவில்லை.
         மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி காலத்திலிருந்தே பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட மாணவர் தேர்தலை நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் கொல்கத்தாவில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். அந்த போராட்டத்தை அடக்குவதற்காகவும், ஒடுக்குவதற்காகவும் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து மாணவர்களை கொலைவெறியுடன் தாக்கியிருக்கின்றார்கள். அதில் பல மாணவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். அந்த போலீஸ் தாக்குதல்களில் பலத்த காயமடைந்த இருபத்தி மூன்றே வயதான இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் சுதிப்தா குப்தா உயிரிழந்தார்.
             இந்த கொலைவெறி தாக்குதலை கண்டிப்பாக கண்டிக்கவேண்டும். நியாயத்திற்காக போராடும் தோழர்களின் இரத்தத்தை குடிக்கும் மம்தாவின் பேயாட்டத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ளவேண்டும்,

கருத்துகள் இல்லை: