வியாழன், 12 ஜூலை, 2012

''கடவுள்'' என்ற கருத்துக்கு சவக்குழி தோண்டிய ''கடவுள் துகள்''

      
   ''பிரபஞ்ச ரகசியம்'' என்று ஒரு சொல் வழக்கில் உண்டு. அப்படித்தான் இன்றுவரையில் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது. ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது; அணுக்களால் ஆனது தான் உலகம் என்று.
                 13,750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ''பிக்-பேங்க்'' எனப்படும் பெருவெடிப்பின் போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது. 
           எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் வெவ்வேறு திடப்பொருட்களாக உருவாகி  உள்ளன. நாம் வாழுகிற பூமி, நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி, செல்போன், மேசை, நாற்காலி, பேனா, மோட்டார் வாகனங்கள், இப்படி எல்லாமே அணு சேர்க்கையில் உருவானவைதான். இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.
             அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது. அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
             அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின்போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
               இதற்காக பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து, உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.
              இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-ஆவது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ''ஹிக்ஸ் பாசன் துகள்'' என்று அழைக்கப்பட்டு வந்தாலும்,  இந்த ''ஹிக்ஸ் போசான்'' அல்லது ''இகிசு போசானைக் கடவுள் துகள்'' - God Particle  என்றும் குறிப்பிடுவர், ஆனால் இதைக் கண்டுபிடிக்க அரிதாக இருந்ததால், "கிடைக்கமாட்டேன் இருக்கின்றதே" என்னும் பொருளில் "goddamn particle" என்று நோபல் பரிசாளர் இலியான் இலேடர்மன் (Leon M. Lederman) குறிப்பிட்டதால், அது பதிப்பாளர்களால் சுருக்கம் பெற்று ''கடவுள் துகள்'' என்று பிழையான பொருளுடன் வழங்காயிற்று. 
             இந்தத் துகளின் பண்புகளை மிகவும் ஒத்த ஓர் அணுத்துகளை, சூலை 4, 2012 அன்று  பெரிய ஆட்ரான் மோதுவியில் நிகழ்த்திய இரண்டு தனித்தனி செய்நிலை மெய்த்தேர்வில் இருந்து கண்டுபிடித்தனர். "225GeV/c2 நிறையுடன் (ஏறத்தாழ 133 நேர்மின்னிகள் நிறை) உள்ள புதிய அணுத்துகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.  
                 கடவுள் துகளுக்கு இசைவான இணை அணுவியல் துகள் (New Subatomic Particle) என ஹாட்ரன் மோதி (Large Hadron Collider - LHC) விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கடவுள் துகள் உண்மையில் இருக்கிறதா? அப்படியாயின் இதன் நிறை (Mass) என்ன என்தை கண்டுபிடிக்க கடந்த 45 வருடங்களாக ஆராய்ச்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வந்தன. குறித்த ஆராய்ச்சியின் தொடக்க நிலை முடிவுகளாக இவை கணிக்கபட்டுள்ள போதும், இவை ஆச்சரியம்  தருபவையாகவும், உணர்ச்சிகரமானதுமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அடிப்படை அறிவியல் (Fundamental Science) என்பது இந்த உலகத்துக்கு பொதுவானது. அது தனித்து யாரும் உரிமை கோரமுடியாது. அடிப்படை அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் (Applied Science) இரண்டையும் சமமாகவே உலக மக்கள் கருத வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் உண்பவற்றில், ருசியானது எது? என்பது மட்டும் உங்களுக்கு தெரிந்திருந்தால் போதாது.          நஞ்சானதும் எது என தெரிந்திருக்கவேண்டும். 
          இந்த ஆராய்ச்சிகள் அடிப்படை அறிவியலுக்கும், பயன்பாட்டு அறிவியலுக்கும் இடையிலான ஆழமான முடிச்சுக்களை நோக்கி செல்வதாக குறிப்பிட்டனர். இந்த அணுத்துகள் கண்டுபிடிப்பு, நமது பேரண்டம் தொடங்குவதற்கு முன் எதுவும் இருந்ததில்லை, வெறும் சூனியமாகவே இருந்தது என்ற கருத்தை நிராகரிக்கிறது. கார்ல் மார்க்ஸ் சொன்னதுபோல், எங்கும் எப்போதும் பொருள் என்பது இருந்து வந்திருக்கிறது. பொருள் என்பதற்கு ஆதி - அந்தம் இல்லை என்பதை மெய்ப்பிக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பால் பேரண்டம் உருவாவதற்கு முன் கருமைப்பொருள் இருந்தது - கருமைப்பொருள், ஒளிப்பொருள் என இருந்தது என்ற கருத்து வலுப்படக்கூடும். இதனால், மக்கள் வாழ்வுக்கு என்ன பயன் என்ற கேள்வி எழுவது இயல்பு. 
                   பேரண்டத்தையும், உலகத்தையும், வாழ்க்கையையும் அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதற்கு இதுவும் உதவும். இந்த ஆராய்ச்சிக்காகவே உருவாக்கப்பட்ட சோதனைக் கருவிகளும், காந்தப்புலன் கருவிகளும் எதிர்காலத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்கு மிகவும் பயன்படும். பொருளின் “திரட்சி” சுருக்கப்பட்டு, செயல் திறன் அதிகரிக்கப்படும். அதனால் என்ன பயன்? எடுத்துக்காட்டாக இன்று ஒரு ஜெட் விமானம் 200 டன் எடையில் தயாரிக்க முடிகிறது. இந்த கண்டுபிடிப்பின் கோட்பாடுகளை பயன்படுத்துவதன் மூலம், அதே விமானத்தை 20 டன் எடையில் தயாரிக்க முடியும்! இதனால், எரிபொருள் செலவு மிகப்பெருமளவுக்கு சேமிக்கப்படும். வேறு கோள்களுக்கு விண்வெளிக் கப்பல்களை அனுப்புவது என்பது இன்று ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு விமானத்தில் செல்வதுபோல் எளிதாகிவிடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
              பொருள் முதல்வாத சிந்தனைகளை உரத்து உரைக்கும் இந்த அணுத்துகள் ஆராய்ச்சி யில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். கடவுள் என்ற கருத்துக்கு சவக்குழி தோண்டிய கடவுள்துகள் எப்படியோ கடவுள் என்ற கருத்துக்கு மரண அடிவிழுந்து அதன் மூலம் மனிதர்கள் தங்களின் தவறுகளையும் எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ள அறிவியலின் துணையை முழுமையாக நம்புமும்  காலம் நெருங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது  
நன்றி :  புதுவை அறிவியல் இயக்கம், புதுச்சேரி 

6 கருத்துகள்:

naveen kumar சொன்னது…

மிக சிறப்பான பதிவு தோழர்

naveen kumar சொன்னது…

மிக சிறப்பான பதிவு தோழர்

புதுவை ராம்ஜி சொன்னது…

மிக்க நன்றி தோழர்.naveen kumar ....!

Kaliyan G சொன்னது…

sir neenga rommba buthhi sali appadingurathu rommba theliva theriyuthu. kadavul illa appdainguratha proof pannurathukku ethana latcham kodi kala selavu panni irukkanga. ungalukku pothu udamai pathi pesa thaguthiye illa. southafrica la ethanayo latcham manithargal sappida vali illama irukkanga, yen india la ethanayo ayiram makkal sappida vali illama irukkanga ivargaloda sappattuku vali ya pathi yosikkama, kadavul illa appadingratha proof pannunathukkaga evalavu santhosam ungalukku. "thani manithanukku unavu illaiyenil intha jagathinai alippom" entru sonnar bharathi. unavu visayathil intha ulagame thanniraivu adayattum appuram neenga intha karutha munvainga sir appo nanga romba santhosa paduvom. pothu udamai pesura communist ku ethukku sir vilai uyarntha car ellam. flight to da petrol selava kuraikurathukku intha mathiri kandu pidipukal uthavumam. sir ella manusanoda vayitru pasi ya pokkurathuku oru valiya kandu pidikka sollunga sir.

Kaliyan Ganesan சொன்னது…

sir neenga rommba buthhi sali appadingurathu rommba theliva theriyuthu. kadavul illa appdainguratha proof pannurathukku ethana latcham kodi kala selavu panni irukkanga. ungalukku pothu udamai pathi pesa thaguthiye illa. southafrica la ethanayo latcham manithargal sappida vali illama irukkanga, yen india la ethanayo ayiram makkal sappida vali illama irukkanga ivargaloda sappattuku vali ya pathi yosikkama, kadavul illa appadingratha proof pannunathukkaga evalavu santhosam ungalukku. "thani manithanukku unavu illaiyenil intha jagathinai alippom" entru sonnar bharathi. unavu visayathil intha ulagame thanniraivu adayattum appuram neenga intha karutha munvainga sir appo nanga romba santhosa paduvom. pothu udamai pesura communist ku ethukku sir vilai uyarntha car ellam. flight to da petrol selava kuraikurathukku intha mathiri kandu pidipukal uthavumam. sir ella manusanoda vayitru pasi ya pokkurathuku oru valiya kandu pidikka sollunga sir.

sabari சொன்னது…

nice thozharae..useful information..good example for rationalism.kadavul peyarai solli yematri pozappu nadathum anaivarukkum nalla seruppadi intha katturai.