ஞாயிறு, 4 டிசம்பர், 2011

திராவிடக்கட்சிகளின் ஓட்டு அரசியலுக்கு நதிநீர் பிரச்சனை தேவைப்படுகிறது...!

              1967 - ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப்பொறுப்பில் ஏறியதிலிருந்து, திமுகவும்   அதிமுகவும்  தான் மாறி மாறி ஆட்சிசெய்து வருகிறார்கள். மழைநீர் சேமிப்பில் என்ன  ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள்...? பொதுமக்கள் வீடுகளில் மழைநீர் சேமிப்புக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று சட்டம் போடுகிறார்களே தவிர... இவர்கள் மழை நீர் சேமிப்பிற்கு அணைக் கட்டியிருப்பார்களா...? தமிழ்நாட்டில் பெய்யும் மழையில் இருபத்தைந்து சதவீதத்திற்கும் குறைவாகவே  பாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது.  எழுபத்தைந்து சதவீதத்திற்கும் அதிகமான மழைநீர் யாருக்கும் பயன்படாமல் வீணாகவே கடலில் கலக்கிறது என்பது தான் உண்மை. வீணாகப்போகும் மழைநீரை சேமிக்கவேண்டும் என்பது மட்டுமில்லாது அப்படி சேமித்தால் அண்டை மாநிலங்களில் கையேந்த வேண்டாம் என்பதுமான குறைந்த பட்ச அறிவுக்கூட இந்த திராவிடக்கட்சிகளின் ஆட்சியாளர்களுக்கு இல்லை.
               இயற்கை ஒவ்வொரு ஆண்டும் நிறைய மழை நீரை கொட்டித்  தருகின்றது. என்றாலும் தமிழகம் ஒவ்வொரு ஆண்டும் பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களின் தயவை தான் எதிர்பார்த்து  நிற்கின்றது. அந்த மாநிலங்களிலிருந்து தமிழகம் வழியாக ஓடும் நதிகளிலிருந்து தமிழகத்தின் பங்குகளை கேட்கும் போராட்டத்தைத் தான் இது வரை இந்த திராவிட கட்சிகளின் அரசுகள் செய்து வருகின்றன. அதுவும் இந்த ''நதி நீர் பிரச்சனை'' தீர்க்கப்படாமல் இருப்பதைத் தான் இந்த கட்சிகள் விரும்புகின்றன. காரணம் என்னவென்றால்,  ''நதி நீர் பிரச்சனை'' என்பது இவர்களின் ஓட்டு அரசியலுக்கு அவசியம் தேவைப்படுகிறது. ''நீர்'' மக்களுக்கும், பாசனத்துக்கும் முக்கியமோ இல்லையோ, ''நீர் பிரச்சனை'' இவர்களின் தேர்தல் அரசியலுக்கு  முக்கியமானது.
                தமிழகத்தில் உள்ள அணைகள் எல்லாம் கல்லணை மன்னர் காலத்திலும், மேட்டூர் அணை மற்றும் முல்லை பெரியார் அணை போன்றவைகள்  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும், மணிமுத்தாறு அணை, வைகை அணை,   ஆழியாறு அணை, சாத்தனூர் அணை மற்றும் கிருஷ்ணகிரி அணை போன்ற அணைகள் எல்லாம் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதே ஆகும். ஆனால் இந்த இரு திராவிடக்கட்சிகளின் ஆட்சியில்  எதிர்கால குடிநீர் தேவைகளுக்கும், விவசாய பாசனத்திற்கும்  அணைகள் கட்டப்படவேண்டும் என்கிற எண்ணம் இருந்ததா...? மாறாக, எல்லா மாவட்டங்களிலும் இருந்த நீர்நிலைகளான பல ஏரிகளில் பஸ் ஸ்டாண்ட், காய்கறி மார்கெட்டுகளும் கட்டியிருக்கினரே நீரை தேக்கவேண்டும்  என்ற  குறை பட்ச அறிவுகூட இல்லாமல் இருகின்றனர்;    ஏனென்றால் ''நீர் பிரச்சனை'' என்பது இவர்களின் ஓட்டு அரசியலுக்கு   பயன்படுகிறது.
                  ''நதி நீர் பிரச்சனை'' யின் மூலம் மொழிப் பிரச்சனையையும், இனப் பிரச்சனையையும் தூண்டிவிட்டு அதில் குளிர்க் காய்பவர்களாகத்  தான் இந்த திராவிடக்கட்சிகள் இன்று வரை இருந்து வருகின்றன. ஓட்டுக்காக  திராவிடக்கட்சிகள் மக்களிடையே மொழி உணர்வையும், இனவுணர்வையும்  கிளப்பிவிடுவது என்பது வாடிக்கையானது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.                                      

3 கருத்துகள்:

தினேஷ்குமார் சொன்னது…

தங்கள் கூற்று சரியானதே ... பகடைகளாக தமிழக மக்கள்

poovalagan சொன்னது…

thiravida kachikalai kurai solvathai vittuvittu mullai periyaru annai kappatra tamilnadu makkal enna seikirom .uruppadiana karuththukkalai makkaluku thayavu seithu sollunkal.nammalai naame kurai sollamal onru paduom kappom periyaru annai
yai

PRINCENRSAMA சொன்னது…

அடடா... எவ்வளவு அக்கறை! சே. இந்த அக்கறையும் கேவலமான முறையில் இன அரசியல் நடத்தும் கேரள மார்க்சிஸ்ட் கட்சி குறித்து வாய் திறக்காமல் என்ன நாசூக்காக வெளிவருகிறது. எழுத இடம் இருக்கு... எழுதுங்கோ... எழுதுங்கோ...