வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

பிரதமர் பதவிக்காக வெட்கங்கெட்டு அலையும் நரேந்திர மோடி...!

  
          பிரதமர் பதவிக்காக தீயா வேலை செய்யும் நரேந்திர மோடியை நினைச்சாலேயே நமக்கு அருவருப்பா இருக்கு. மோடியின் மோசடி செயல்களுக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட 15,000 குஜராத்திகளை அனுமான் போல் தோளில் தூக்கிக்கொண்டு காப்பாற்றினார் என்ற அப்பட்டமான பொய்யை தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் அவிழ்த்துவிட்டு, பின்னர் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்ற உண்மை செய்தி ஊடகங்களில் வந்த பின்னும் வெட்கமே இல்லாமல் நடமாடிக்கொண்டிருக்கும் நரேந்திர மோடி, தற்போது   இன்னொரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். 
         2014 பொதுத்தேர்தலுக்குப் பின் நரேந்திர மோடி தான் பிரதமராக வருவார் என்று பழம்பெரும் இந்தி திரைப்படக்கலைஞர் அமிதாப்பச்சன் பேசுவது போன்ற ஒரு ''கள்ள'' வீடியோ பதிவை வலைத்தளங்களில் பரவவிட்டிருக்கிறார். இந்த விஷமத்தனமான வீடியோவைப் பார்த்து அமிதாப்பச்சனே அதிர்ந்து போயிருக்கிறார். ஏன்னா... அந்த வீடியோவில வருபவர் அவர் தான்... ஆனால் நரேந்திர மோடி பற்றிய பேச்சு அவருடையது இல்லை. ''இது ஒரு போலி வீடியோ... 2007 - ஆம் ஆண்டு வேறு ஒரு நிகழ்ச்சிக்காக   எடுக்கப்பட்ட வீடியோவை, நரேந்திர மோடிக்கு ஆதரவாக நான் பேசியது போல் வேறு ஒருவரை வைத்து பேசவைத்து பிரச்சாரத்திற்காக தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இது போன்று செய்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று அமிதாபச்சன் கடுமையாக கோபப்பட்டிருக்கிறார். தன்னுடைய மோசடி வெளியே தெரிந்துவிட்டதால் மோடி அமிதாபச்சனிடம் அசடு வழிந்திருக்கிறார்.
           எப்படியாவது தில்லுமுல்லு பண்ணி பிரதமர் நாற்காலியில உட்காரத் துடிக்கும் நரேந்திர மோடியின் சித்து விளையாட்டுகளும், தில்லுமுல்லுகளும், மோசடி செயல்களும் தாங்க முடியலடா சாமி...!

கருத்துகள் இல்லை: