ஞாயிறு, 28 ஜூன், 2015

மதங்கள் இங்கே உடைக்கப்பட்டன...!


         அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூலம், முகமது ஷாநவாஸ் ஜாகீர் என்ற இஸ்லாமியர் குடும்பம் அயுஷ் மற்றும் பிரார்த்தனா என்ற பெற்றோர்களை இழந்த இந்து குடும்பத்தை இரட்டைக்குழந்தைகளை சட்டப்பூர்வமாக தத்தெடுத்திருக்கிறார்கள். இதைவிட இந்த நாட்டில் இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு சிறந்த உதாரணம் இருக்கமுடியாது. 
            2012 - ஆம் ஆண்டில் ஒரு வருட இடைவெளியில் விமான பைலட்டாக பணிபுரிந்த தந்தையையும், விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த தாயையும் இழந்த அந்த குழந்தைகளை வளர்க்க அதே மதத்தை சேர்ந்த அவர்களின்  உறவினர்கள் யாரும்  மனமுவந்து  முன் வரவில்லை. அதுமட்டுமல்ல, அவர்கள்  அக்குழந்தைகளை இரக்கமின்றி உதாசினப்படுத்தியும், மரியாதையின்றியும் நடத்தியிருக்கிறார்கள். இங்கே மதம் எங்கே போனது....? அல்லது அந்த மதம் தான் அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தது...? ஆனால் அந்த ''இந்து'' குழந்தைகளை எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ஒரு ''இஸ்லாமிய'' குடும்பம் தத்தெடுத்திருப்பது என்பது ''மனிதம்'' - ''மானுடம்'' மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நிருபித்து காட்டியிருக்கிறது. 
               பெற்றோர்களை இழந்து தவித்த இரண்டு குழந்தைகளை மதத்தை கடந்து தத்தெடுத்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முகமது ஷாநவாஸ் ஜாகீர் குடும்பத்தை பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை: