சனி, 5 மார்ச், 2011

ஊழலின் மொத்த உருவம் மன்மோகன் சிங்மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக (cvc) பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டது முறைகேடானது என்று உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்ததுமட்டுமல்லாது, பிப்ரவரி 3 ஆம் தேதியன்று தாமஸ் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் ஊழல் பேர்வழிகளை மட்டுமே தனது கூட்டாளிகளாக வைத்துக்கொள்ளும் மன்மோகன் சிங்கின் தலையில் மேலும் ஒரு குட்டு வைத்துள்ளது. இரண்டாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் இது தான்.
கடந்த மே 2009-ல் தில்லுமுல்லுகள் செய்து ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து தறுதலைத்தனமான, தான்தோன்றித்தனமான ஒழுக்கக்கேடான மன்மோகன்சிங்கின் ஆட்சியில் ஊழலின் அணிவகுப்பு தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவரும் வெட்கமில்லாமல் நடமாடிக்கொண்டிருக்கிறார். ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்கக்கூடாது என்பது சிறு குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனால் மன்மோகன்சிங் - . சிதம்பரம் கூட்டாளிகளுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது என்பது தெரியவில்லை.
கேரள உணவுத்துறை செயலராக இருந்தபோது பாமாயில் இறக்குமதியில் ஊழல் செய்து ஊழல் வழக்கில் முக்கிய நபராக குற்றம் சாட்டப்பட்ட பி. ஜே. தாமஸ் மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக மன்மோகன்சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு பரிந்துரை செய்த போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால்
அதையும் மீறி நியமித்தது என்பது இந்த தேசத்திற்கு செய்த அவமானம். அதுமட்டுமல்லாமல், ஒரு ஊழல் குற்றவாளிக்கு பதவிப்பிரமாணம் செய்யவைத்ததன் மூலம் குடியரசுத்தலைவரையும் அவமரியாதை செய்திருக்கிறார்கள். பிரதமர் இது ஏதோ தெரியாமல் செய்துவிட்ட தவறுபோல் இந்த நிகழ்வுகளுக்கு தான் பொறுப்பேற்பதாக வெறும் வார்த்தையில் சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றுவிட முடியாது. தவறான ஒருவரை நேர்மையாக நடக்கவேண்டிய ஒரு பதவியில் நியமித்து இந்த தேசத்திற்கும் குடியரசுத்தலைவருக்கும் அவமரியாதை செய்த பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்துறை அமைச்சர் . சிதம்பரமும் பதவி விலகவேண்டும் என்பதே இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

2 கருத்துகள்:

S.Raman,Vellore சொன்னது…

Even in this issue, the Media is projecting BJP as a Crusader against Corruption. If the CPM and LDF in Kerala had not fought against the Palmolin Corruption Issue in the Streets as well as in Court, PJ Thomas would not have been Exposed. Media is trying to hide this Truth. We must focus it.

Keep it up Comrade

Raman

You can remove the Word Verification. It is a hurdle to those wish to offer comments

புதுவை ராம்ஜி சொன்னது…

Thank you Comrade.