திங்கள், 21 ஜூலை, 2014

வேலையில்லா பட்டதாரி - ஒழுக்ககேடுகள் நிறைந்த படம்

                

            படித்து பட்டம் பெற்று   வேலை தேடும் இரு பால் இளைஞர்களை ''வேலையில்லா பட்டதாரி'' என்று அழைப்பதே தவறு. அவர்களை ''வேலை தேடும் பட்டதாரி'' என்று அழைப்பதே சிறந்ததாக இருக்கும். படித்துவிட்டு வேலை தேடும் இன்றைய இளைஞர்களையும், கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களையும் ஈர்ப்பதற்காகவே வைக்கப்பட்ட தலைப்பு. அதற்கேற்றார் போன்ற கதை. திரையரங்கில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
              ஆனால் வழக்கம் போல் நடிகர் தனுஷ் ''பார்முலா''வுடன் கூடிய ஒழுக்கக்கேடான திரைப்படம். அப்பா - அம்மாவிற்கு அடங்காத பிள்ளையாக அவர்களையே எதிர்த்து பேசுவது, பெரியவர்களுக்கு தெரியாமல் வீட்டினுள்ளேயே ''தம்'' அடிக்கிறது, நண்பர்களுடன் கூடி ''தண்ணி'' அடிப்பது, சீனுக்கு சீன் விதவிதமான ஸ்டைலில் சிகரெட் பிடிப்பது, நாலு பேரை அடித்து ரவுடித்தனம் செய்வது போன்ற வழக்கமான தனுஷ் ''பார்முலா'' நிரம்பி வழியும் படம். ஆனால் இத்தனை ஒழுக்கக்கேடுகள் அனைத்தும் கொண்ட இளைஞனுக்கு  பேரு  தான் ''வேலையில்லா பட்டதாரி...!''   ஒரு கதாநாயகன் என்றால் ''தனிமனித ஒழூக்கமில்லாமல்'' இப்படி தான் இருக்கவேண்டுமா என்ன...? இதைத்தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்களா...?
                ஏற்கனவே ''டாஸ்மாக்கில்'' இளைஞர்களின் கூட்டம் குவிகிறது. இதுல இப்படியெல்லாம் திரைப்படங்களை எடுத்தால் இனி இளைஞர்களை ''டாஸ்மாக்கில்'' தான் பார்க்கவேண்டும். இதனால் படித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்களின் போராட்டக்குணம் பலமிழந்து மங்கிப்போய்விடும். எனவே, போராட்டக்குணங்களை மழுங்கடிக்கச் செய்யும் அத்துணை ஒழுக்ககேடுகளையும் நீக்கிவிட்டு, ''வேலை'' என்பது இளைஞர்களின் ''உரிமை'' என்பதை எடுத்துச்சொல்லும் விதமாக திரைப்படம் எடுத்திருந்தாலோ... அல்லது அந்த வேலை உரிமைக்காக போராடுகிற போராளியாக கதாநாயகனை காட்டிருந்தாலோ அத்திரைப்படத்தை நெஞ்சாரப் பாராட்டியிருக்கலாம்.
                 இனிமேலாவது இன்றைய இளைஞர்களுக்கு தனிமனித ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கிற கதையம்சம் கொண்ட திரைப்படங்களை எடுங்கள். அதற்கேற்ற கதாநாயகர்களை தேர்ந்தெடுத்து தயார்படுத்துங்கள். அதுதான் இன்றைய இளைய சமூகத்திற்கு அவசியமான தேவையாகும்.

2 கருத்துகள்:

தமிழானவன் சொன்னது…

உண்மைதான். உங்களுடன் ஒத்துப்போகிறேன். இதைப்பார்த்துவிட்டு வந்து வேலைக்குப் போகிறவன், வேலை கிடைக்காதவனெல்லாம் படம் சரியான மாஸ் என்று சொல்வதைக் கேட்டால் கேட்டால் எரிச்சல்தான் வருகிறது :(((

தமிழானவன் சொன்னது…

உண்மைதான். உங்களுடன் ஒத்துப்போகிறேன். இதைப்பார்த்துவிட்டு வந்து வேலைக்குப் போகிறவன் போகாதவனெல்லாம் படம் சரியான மாஸ் என்று சொல்வதைக் கேட்டால்
எரிச்சல்தான் வருகிறது :(((